ஆளுமை:அரவிந்தன், கி. பி.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அரவிந்தன்
தந்தை பேதுறு கிறிஸ்தோபர்
தாய் மாசிலாமணி
பிறப்பு 1953.09.17
இறப்பு 2015.03.08
ஊர் நெடுந்தீவு
வகை எழுத்தாளர்

அரவிந்தன், கி. பி. (1953.09.17 - 2015.03.08) யாழ்ப்பாணம், நெடுந்தீவைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர், போராளி. இவரது இயற்பெயர் கிறிஸ்தோபர் பிரான்சிஸ். இவரது தந்தை பேதுறு கிறிஸ்தோபர்; தாய் மாசிலாமணி. தனது கல்வியை ஆரம்பத்தில் நெடுந்தீவிலும் பின்னர் மட்டக்களப்பிலும் பயின்றார். ஈரோஸ் அமைப்பில் போராளியாக அறியப்பட்ட இவர் 1977 இல் புலம்பெயர்ந்து பிரான்சில் குடியேறினார்.

இவர் பி.பி.சி தமிழோசையின் பரீஸ் நகர செய்தியாளராகப் பணியாற்றியதோடு ஐரோப்பியத் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபற்றியுள்ளார். 'அப்பால் தமிழ்' என்னும் இணையத்தளத்தினை நடாத்தியதோடு புதினப்பலகை இணையத்தளத்துக்கும் பங்களித்தார். இனி ஒரு வைகறை (1991), முகம் கொள் (1992), கனவின் மீதி (1999), பாரிஸ் கதைகள் (சிறுகதைகள், 2004) ஆகியவை இவரது நூல்கள்


இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 08 பக்கங்கள் 100
  • நூலக எண்: 16140 பக்கங்கள் 07-08
  • நூலக எண்: 15225 பக்கங்கள் 23