ஆளுமை:அரியநாயகம், கோவிந்தசாமி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அரியநாயகம்
தந்தை கோவிந்தசாமி
பிறப்பு 1950.12.13
ஊர் பூநகரி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அரியநாயகம், கோவிந்தசாமி (1950.12.13) வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்றை பிறப்பிடமாகவும் ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு, பூநகரி என்ற முகவரியைச் வசிப்பிடமாககவும் கொண்ட கலைஞர். இவரது தந்தை கோவிந்தசாமி.

சிறுவயது முதலே புராண படனம் ஓதுவதில் ஈடுபாடு கொண்டவர். ஆலயங்களில் பிள்ளையார் புராணம், கந்தபுராணம், சிவராத்திரி புராணம், திருவாதவூரடிகள் புராணம், கோவலன் கண்ணகி கதை படித்தல் போன்ற புராணபடன மரபில் ஓதுவாராகவும் திருவாசகம் முற்றோதல் செய்பவராகவும் உள்ளார்.

ஜாதகம் கணித்தல், ஜாதகம் எழுதுதல் என்பவற்றை சமய சாஸ்திர புத்தகங்களைக் கற்றதன் வாயிலாக அறிந்து கொண்டார். 1979ஆம் ஆண்டு அரச சேவையில் இணைந்து கொண்டார். பல சமூகப் பணிகளை ஆற்றியுள்ளார். அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்று ஜெயபுரம் முருகன் ஆலய பரிபாலன் சபை தலைவராகவும் ஓதுவராகவும் சமய ஞானியாகவும் சொற்பொழிவாளராகவும் இருந்து கலைத்தொண்றாற்றி வருகிறார்.


விருதுகள்

கலைநகரி விருது – பூநகரி பிரதேச கலாசார பேரவை – 2013.

வளங்கள்

  • நூலக எண்: 17074 பக்கங்கள் 94-95