ஆளுமை:அரியரட்ணம், பசுபதி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அரியரட்ணம்
தந்தை பசுபதி
தாய் ஆச்சிமுத்து
பிறப்பு 1947.02.17
ஊர் முகமாலை
வகை அரச அதிகாரி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அரியரட்ணம், பசுபதி (1947.02.17 - ) முகமாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவரது தந்தை பசுபதி; தாய் ஆச்சிமுத்து. இவர் தனது ஆரம்பக்கல்வியை எழுதுமட்டுவாழ் பாடசாலையிலும், தரம் 6 இலிருந்து உயர்தரம் வரை உஷன் மகா வித்தியாலயத்திலும் கற்று பேரகதனைப்பல்கலைக் கழகத்தில் பட்டதாரியானார். 1971 ஆம் ஆண்டில் கரைச்சி தெற்கு ப.நோ.கூ. சங்கத்தின் பொது முகாமையாளராகவும், 1975 ஆம் ஆண்டு பூனகரி ப.நோ.கூ. சங்கத்தின் பொது முகாமையாளராகவும் 1976 ஆம் ஆண்டு பச்சிலைப்பள்ளி ப.நோ.கூ. சங்கத் தலைவராகவும், 1976 ஆம் ஆண்டு பளை மத்திய கல்லூரியில் பட்டதாரி ஆசிரியராகவும், 1981 ஆம் ஆண்டு இயக்கச்சி அ.த.க. பாடசாலையின் அதிபராகவும், 1984 ஆம் ஆண்டு வட்டக்கச்சி ம.வி. அதிபராகவும், கொத்தணி அதிபராகவும், 1989 ஆம் ஆண்டு கிளிநொச்சி வலய உதவிக்கல்விப் பணிப்பாளராகவும், 1992 ஆம் ஆண்டு பளை மத்திய கல்லூரி அதிபராகவும், கோட்டக் கல்வி அதிகாரியாகவும், 1995ஆம் ஆண்டு கிளிநொச்சி வலயக் கல்வி அபிவிருத்திக்கு பொறுப்பான பிரதிக்கல்விப் பணிப்பாளராகவும்,1999 ஆம் ஆண்டு தொடக்கம் கிளி, முல்லை மாவட்டங்களில் வலயக்கல்விப் பணிப்பாளராகவும், 2008 ஆம் ஆண்டு தொடக்கம் வட மாகாணத்தின் மேலதிக மாகாணக்கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றி ஓய்வு பெற்றார். 2013 ஆம் ஆண்டு தொடக்கம் 2017 ஆம் ஆண்டு வரை வடமாகாண சபை உறுப்பினராகவும் சேவையாற்றினார்.

இவர் கல்வி வளர்ச்சிக்கு ஆற்றிய சேவைகளுக்காக பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் விருதையும் பிரதேச செயலகத்தினால் சிறந்த சமூக சேவையாளன்” என்ற விருதையும் கிளிநொச்சி மாவட்ட கல்வி பண்பாட்டுப் பேரவையினால் கல்வி மாமணி” என்ற விருதையும் பெற்றுக்கொண்டார்.