ஆளுமை:அருந்தவன், சின்னத்தம்பி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அருந்தவன்
தந்தை சின்னத்தம்பி
பிறப்பு 1949.01.10
ஊர் மீசாலை
வகை கலைஞர்

அருந்தவன், சின்னத்தம்பி (1949.01.10 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இசைக்கலைஞர். இவரது தந்தை சின்னத்தம்பி. டோல்கி வாசிக்கும் இசைக்கலைஞராகவும், சிறந்த பாடகராகவும் விளங்கிய இவர் 1975 ஆம் ஆண்டிலிருந்து இசைப்பணி ஆற்றி வந்துள்ளார்.

இவர் நாதன் இசைக்குழு என்ற பெயரில் ஒரு இசைக்குழுவை ஆரம்பித்து யாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்னிசை நிகழ்வுகளை மேற்கொண்டு வருவதுடன் தெல்லிப்பளை, மல்லாகம், சண்டிலிப்பாய், சங்கானை, அரியாலை, யாழ்ப்பாணம், காரைநகர், ஊர்காவற்துறை, காரைநகர் போன்ற பல இடங்களில் இசைப்பணி ஆற்றியுள்ளார். இவரது இசைப்பணியைப் பாராட்டி நல்லிசை நாதமணி என்ற பட்டம் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 118