ஆளுமை:அருளம்பல சுவாமிகள், இராமநாதர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அருளம்பல சுவாமிகள்
தந்தை இராமநாதர்
தாய் சின்னாச்சிப்பிள்ளை
பிறப்பு 1865
ஊர் வண்ணார்பண்ணை
வகை சித்தர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அருளம்பல சுவாமிகள், இராமநாதர் (1865 - ) யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைச் சேர்ந்த ஈழத்துச் சித்தர்களுள் ஒருவராவார். இவரது தந்தை இராமநாதர்; தாய் சின்னாச்சிப்பிள்ளை. இவர் குழந்தைவேற் சுவாமிகளைக் குருவாகக் கொண்டவர். இவர் மெற்ரிக்குலேசன் பரீட்சையில் சித்தியடைந்து இளம்வயதில் அரசாங்க உத்தியோகத்தரானார்.

பகுத்தறிவுவாதிகள் சங்கம், சுத்ததர்ம மண்டலம் ஆகியவற்றின் அங்கத்தவராகவும் விளங்கினார். இவர் கடவுள், உயிர், உலகம் என்பவற்றை ஆராய்ந்தார். யாழ்ப்பாணக் கச்சேரியில் மாகாணப் பதிவுப் பகுதி பிரதம லிகதராகக் கடமையாற்றினார். சமயப் பணிக்கும், கல்விப் பணிக்கும் அச்சியந்திரம் அவசியம் என்பதை உணர்ந்து சுத்தாத்வைத அச்சியந்திரசாலை என்ற அச்சகத்தை நிறுவினார்.

வளங்கள்

  • நூலக எண்: 961 பக்கங்கள் 46-52