ஆளுமை:அலேஸ், மிக்கேல்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அலேஸ்
தந்தை மிக்கேல்
தாய் ஞானப்பிரகாசி
பிறப்பு 19952.06.06
ஊர் கிளிநொச்சி, புலோப்பளை
வகை கல்வியியலாளர், ஆய்வாளர், பேராசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அலேஸ், மிக்கேல் (1952.06.06 - ) கிளிநொச்சி, புலோப்பளையைப் பிறப்பிடமாகக் கொண்ட கல்வியியலாளர். இவரது தந்தை மிக்கேல்; தாய் ஞானப்பிரகாசி. இவர் தனது ஆரம்பக் கல்வியினை பளை மகா வித்தியாலயத்தில் கற்றார்.

சிறு வயது தொட்டே கூத்து கலை மீது விருப்பு கொண்ட இவர் எப்போதும் தனது ஊரில் நடைபெறுகின்ற கூத்துகளிற்கு முதலாவதாக சென்றுள்ளார். 5ஆம் தரம் படித்த போது முதன் முதலாக கால்சட்டையும் வேண்டாம் கல்யாணமும் வேண்டாம் என்ற நாடகத்தை நடித்து ஊர் மக்களின் பாராட்டுக்களை பெற்றார். தொடர்ந்து அவரது நடிப்பு திறமையினால் 1962ல் பித்தலாட்டம் என்னும் கூத்தொன்றில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கப்பெற்று அதிலும் அவர் தனது உச்ச திறமையினை வெளிப்படுத்தினார். பின்னர் தனது 20 ஆவது வயதில் அன்பின் பெருமை, காதலா கடமையா, காருவத் என்னும் நாடகங்களை நடித்தார். 1974 இல் கற்பகமாலா, பொண்ணின்செபமாலை, கிறிஸ்தோபர் போன்ற நாடகங்களையும்1977 இல் அருவி , ஓதியமரம் போன்ற நாடகங்களையும் நடித்துள்ளார். தனது 23ஆம் வயதில் சங்கிலியன் பாத்திரத்தில் அண்ணாவியராக நடித்ததோடு 1977 மற்றும் 1979 ஆம் ஆண்டுகளில் கோலியாத் தீவு, பாரேசன் நாடகங்களிலும் 1979, 1980 களில் ஜோசப்பர், எஸ்தர் போன்ற கூத்துக்களிலும் 1981 இல் யாக்கோப்பு சந்தியாம் அவர்களின் அண்ணாவியத்திலும் நடித்துள்ளார். அது மட்டுமன்றி இவர் சென்பீற்றர் கலாமன்றத் தலைவர் ஆவார்.