ஆளுமை:அளகேசமுதலியார், ந.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அளகேசமுதலியார்
தந்தை நல்லதம்பி
பிறப்பு 1916
ஊர் ஆரையம்பதி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அளகேசமுதலியார், ந. (1916) ஆரையம்பதியில் பிறந்த அளுமை. இவரது தந்தை நல்லதம்பி. ஆரையூர்க்கோவை என்ற நூலை வெளியிடுவதற்கு இவரே நிதியுதவி வழங்கினார். பல நூறு செய்யுள்களை யாத்து புகழ்பெற்றார். சமயச் சொற்பொழிவுகள் நிகழ்த்துதல், கந்தபுராண விரிவுரை செய்வதென சமூக சேவைகள் செய்துள்ளார். சித்தாண்டி சித்தி வேலாயுதர் கோயில் தலம் மீது ஒரு தல புராணம் பாடும் ஏற்பாட்டை அப் பகுதி மக்கள் செய்தனர். அந்த புராண அரங்கேற்றத்தின் போது சித்தாண்டி மக்கள் நூலாசியரான இவருக்கு பெரும் கௌரவத்தை வழங்கினர். ஈழத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய தலபுராணங்கள் வரிசையில் சித்தாண்டி தலபுராணமும் அடங்குகின்றது. 250 விருத்தப்பாக்கள் கொண்ட இந்நூல் 1935ஆம் ஆண்டு ஒரு ஏட்டில் உள்ள தகவல்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டதாகும். 1973ஆம் ஆண்டு இந்நூல் வெளியிடப்பட்டது.

1972ஆம் ஆண்டு தமிழ்த்தாய்க் காவியம் எனும் சிறிய நூலை வெளியிட்டார். பல்சுவைப்பாடல்கள் எனும் நூல் தனிப்பாடல்களும் பல்வேறு கோயில்களைப் பற்றிய பாடல் கோவைகளும் பல்சுவைக் கவிதைச் சிதறல்களாக நூற்றுக்கணக்கில் இவரால் இயற்றப்பட்டுள்ளன. கோட்டைமுனை ஸ்ரீ சித்தி விநாயகர் பதிகம், சிந்தாமணிப் பிள்ளையார் பதிகம், கல்லடி ஈழத் திருச்செந்தூர் முருகன் பாடல், பரமநயினார் பதிகம், திருநீலகண்டப் பிள்ளையார் துதி முதலியன இவற்றுள் சில.

ஆரையூர் நல்.அளகேச முதலியாரால் இயற்றப்பட்ட நூல்களும் தனிப்பாடல்களும் கோவில் தலங்கள், தெய்வ மூர்த்தங்கள் பற்றியும் ஆன்மீக சார்புடையதாகவும் சமய தத்துவங்களை உள்ளடக்கியதாகவும் அமைந்துள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 8018 பக்கங்கள் 33-40