ஆளுமை:அஷ்ரப், ஸமத்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அஷ்ரப்
தந்தை ஸமத்
தாய் அவ்வா உம்மா
பிறப்பு 1966.01.15
ஊர் அம்பாறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


அஷ்ரப், ஸமத் (1966.01.15-) அம்பாறையைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர். இவரது தந்தை அஷ்ரப்; தாய் அவ்வா உம்மா. இவர் தெமட்டக்கொடை தமிழ் வித்தியாலயம், கொழும்பு ஸாஹிராக் கல்லூரி, தெஹிவளை தொழில்நுட்பக் கல்லூரி, கொழும்புப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வி கற்றார். மேலும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழி மூலம் பத்திரிகைத்துறை டிப்ளோமா மற்றும் செயலாளர் முகாமைத்துவ உயர் டிப்ளோமா பயிற்சி நெறிகளையும் கற்றுத் தேறியதோடு, இவர் கணிதத்துறையிலும், ஆங்கிலத்துறையிலும் டிப்ளோமாப் பட்டம் பெற்றார். வீடமைப்பு அமைச்சின் ஊடாக அலுவலகர் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உதவி முகாமையாளர் பதவிகளை இவர் வகித்து வந்துள்ளார்.

இவரின் முதல் சிறுகதை 'விமானம் பறந்தது, உயிரும் பறந்தது' என்னும் தலைப்பில் 1985 ஆம் ஆண்டு தினகரன் வாரமஞ்சரியில் பிரசுரமானது. அன்றிலிருந்து சுமார் 15 சிறுகதைகளையும், 100 இற்கும் மேற்பட்ட கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அவை தினகரன், வீரகேசரி, மித்திரன், தினக்குரல், சுடர் ஒளி ஆகிய பத்திரிகைகளில் இடம்பெற்றுள்ளன.


வளங்கள்

  • நூலக எண்: 1670 பக்கங்கள் 26-28
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அஷ்ரப்,_ஸமத்&oldid=605920" இருந்து மீள்விக்கப்பட்டது