ஆளுமை:ஆஞ்சலீன், F.S

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஆஞ்சலீன்
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆஞ்சலீன், F.S யாழ்ப்பாணத்தில் பிறந்த எழுத்தாளர். யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர் திருகோணமலையை வசிப்பிடமாகக் கொண்டவர். யாழ் சுண்டிக்குளி மகளிர் கல்லூரி, திருமலை புனித மரியாள் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். பயிற்றப்பட்ட ஆசிரியரான இவர் திருமலை புனித மரியாள் கல்லூரியில் ஆசிரியராகப் பணியை ஆரம்பித்து பிரதி அதிபராக பதவி உயர்வு பெற்று (SLFS II) 30 வருட சேவையாற்றி அதிபராக ஓய்வு பெற்றுள்ளார்.

கலைத்துறையிலும் ஆன்மீகத்திலும் ஈடுபாடு கொண்டவர். வானொலியில் கத்தோலிக்க நற்சிந்தனை வழங்கியுள்ளார். தினபதி, தொண்டன் போன்ற சஞ்சிகைகளில் இவரின் ஆக்கங்கள் வெளியாகியுள்ளன.


படைப்புகள்

"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஆஞ்சலீன்,_F.S&oldid=334505" இருந்து மீள்விக்கப்பட்டது