ஆளுமை:ஆனந்தராஜா, பி.ஏ.சி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஆனந்தராஜா
பிறப்பு 1935.03.21
ஊர் இறம்பைக்குளம், வவுனியா
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆனந்தராஜா, பி.ஏ.சி (1935.03.21) வவுனியா இறம்பைக்குளத்தைில் பிறந்த கலைஞர். வவுனியா, மட்டக்களப்பு, அனுராதபுரம் ஆகிய பாடசாலைகளில் தனது கல்வியை பெற்றுக்கொண்டார். இந்தியாவில் விஞ்ஞான பட்டத்தை பெற்ற இவர் நாடகம் எழுதுதல், தயாரித்தல், ஒப்பனை மற்றும் உடையமைப்பில் பயிற்சிகள் பெற்றுக்கொண்டார். 1963ஆம் ஆண்டு இளவாலை சென்ஹென்றிஸ் கல்லூரியில் ஆசிரியராக இணைந்துகொண்டார். உளவள துணைப் பணியை ஆற்றிய வந்த இவர் வெளிநாடுகளில் பயிற்சிகளை உளவளத்துறை சார் பெற்றுள்ளார்.

பாடசாலை நாடகங்களை தயாரித்து பரிசில்களை பெற்றதோடு கலைக்கழக நாடகப் போட்டிகளிலும் பங்குபற்றினார். இவரது நாடங்களின் தொகுப்பான இருட்டினுள் குருடாட்டம், உளவியல் அனுபவ எழுத்துக்கள், அன்புக்கரங்கள் என்னும் நூலாகவும் வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தினால் வெளியிடப்பட்டது. ஆங்கிலத்திலும் தமிழிலும் இரு நூல்களை படைத்துள்ளார்.

விருதுகள் வவுனியா கலை இலக்கிய நாடக கலைச்செல்வர் என்னும் விருதை வழங்கியது.

வளங்கள்

  • நூலக எண்: 8564 பக்கங்கள் 67