ஆளுமை:ஆமீனா, முஸ்தபா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஆமீனா
தந்தை ஹாஸிம் ஜிப்ரி
தாய் சித்தி கதீஜா
பிறப்பு
ஊர் கொழும்பு
வகை பெண் ஆளுமை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆமீனா, முஸ்தபா கொழும்பு பம்பலப்பிட்டியில் பிறந்த பெண் ஆளுமை. இவரது தந்தை ஹாஸிம் ஜிப்ரி; தாய் சித்தி கதீஜா. கொழும்பு – 07 இல் உள்ள மகளிர் கல்லூரியில் ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர் கல்வி வரை கற்றார். உயர்தரம் சித்தியடைந்து மருத்துவத்துறையில் படித்து டொக்டராக வேண்டுமென்று விரும்பினாலும் பெற்றோரின் விருப்பப்படி 1966ஆம் ஆண்டு கண்டியைச் சேர்ந்த ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவை திருமணம் முடித்தார். இவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உண்டு. இவரின் மகனும் ஒரு அரசியல்வாதியாவார். திருமணத்தின் பின்னர் இவரின் சகோதரியின் ஒத்துழைப்புடன் தொழிற்சாலை ஒன்றை ஆரம்பித்து அதன் உரிமையாளராக செயற்பட்டுள்ளார். சுமார் 30 வருடங்களுக்கு மேலாக பெண்களுக்கு தொழிற்சாலையில் வேலைவாய்ப்பினை வழங்கியுள்ளார். இத் தொழிற்சாலையின் ஊடாக சட்னி, ஜாம் போன்ற பொருட்களை தயாரித்து பக்கற்றில் அடைத்து உள்நாட்டிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு விற்பனை செய்ததுடன் ஜப்பான், இங்கிலாந்து, சவுதி அரேபியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துவந்துள்ளார்.

1983ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட இனக்கலவரத்தின் பின்னர் தொழிற்சாலையை மூடப்பட்டது. அதன் பின்னர் அமீனா கவுன்சிலராக பயிற்சி பெற்று அத்துறையில் விரிவுரையாளராக பணிபுரிந்துள்ளார். முஸ்லிம் கல்வி வட்டத்தின் செயலாளராகவும் தலைவியாகவும் இருந்து சமூக சேவையாற்றியுள்ளார். வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், விதவைகள், சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பல வகையில் உதவிகளை வழங்கியேதோடு பல தரப்பட்ட மக்களுக்கு சுமார் 202 வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளார். முஸ்லிம் கல்வி வட்டத்தின் வேண்டுகோளை ஏற்று பௌசி அவர்களினால் 2002ஆம் ஆண்டு கொழும்பு மருதானையில் அரச காணி ஒன்றைப் பெற்றுக்கொடுத்துள்ளார். அங்கு தொழிற் பயிற்சி நிலையம் ஒன்று தற்பொழுது அமைக்கப்பட்டு பலர் அதன் ஊடாக நன்மை பெறுகிறார்கள்.

விருதுகள்

சிகாமணி என்ற சிறப்புப்பட்டதை ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்காவினால் இவருக்கு வழங்கப்பட்டது.

வளங்கள்

  • நூலக எண்: 37395 பக்கங்கள் 60-62
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஆமீனா,_முஸ்தபா&oldid=407351" இருந்து மீள்விக்கப்பட்டது