ஆளுமை:இரத்தினசிங்கம், செல்லையா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இரத்தினசிங்கம்
தந்தை செல்லையா
பிறப்பு 1956.04.04
ஊர் கள்ளப்பாடு, முல்லைத்தீவு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இரத்தினசிங்கம், செல்லையா (1956.04.04) கள்ளப்பாடு முல்லைத்தீவைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை செல்லையா; சிறு வயது முதலே கலைத்துறையில் ஈடுபாடு கொண்ட இவர் சிறுவயதில் ”ஆவி” என்னும் நாடகத்தில் நடித்ததன் மூலம் பலரின் பாராட்டை பெற்றார். வன்னிப் பெரு நிலப்பரப்பிலே கோவலன் நாட்டுக்கூத்தை கள்ளப்பாடு என்னும் கிராமத்தில் முதன்முதலில் அரங்கேற்றம் செய்த போது தனது 11ஆவது வயதில் இணைந்து கொண்டார்.

கோவலன் நாட்டுக்கூத்தில் பிரதான பாத்திரத்தில் நடித்தார். இடம்பெயர்ந்த காலப்பகுதியில் அம்பலவன் பொக்கணையில் இக்கூத்து அரங்கேறிய போது அண்ணாவியார் செல்வராசா அவர்களுக்கு உதவியாளராக இருந்தார். இவருடைய நெறியாள்கையில் காத்தவராயன் கூத்து ஆறுதடவைகள் மேடையேற்றப்பட்டுள்ளது.

விருதுகள்

சிறந்த சமூகசேவையாளர் – கிராம அபிவிருத்திச் சங்கம் 2016.

முல்லைப் பேரொளி – கரைதுறைப்பற்று கலாசாரப் பேரவை.