ஆளுமை:இரத்தினவேலோன், ஆ.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இரத்தினவேலோன்
பிறப்பு 1958.12.25
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


இரத்தினவேலோன், ஆ. (1958.12.25 - ) யாழ்ப்பாணம், புலோலியூரைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் புற்றளை மகாவித்தியாலயம், ஹாட்லிக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றுள்ளார். இவர் கொழும்பு மீரா பதிப்பகத்தின் மூலம் அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்துள்ளார். இதழ்களில் நூல் அறிமுகக் கட்டுரைகளைத் தொடர்ச்சியாக எழுதி வந்துள்ள இவரது சிறுகதைகளும் நூல் அறிமுகக் கட்டுரைகளும் தொகுப்புக்களாக வெளிவந்துள்ளன.

புதிய பயணம், விடியட்டும் பார்ப்போம், நிலாக்காலம், விடியலுக்கு முன், நெஞ்சாங்கூட்டு நினைவுகள், திக்கற்றவர்கள் போன்ற சிறுகதைகளையும் புதிய சகத்திரப் புலர்வின் முன் ஈழத்துச் சிறுகதைகள், அண்மைக்கால அறுவடைகள், புலோலியூர் சொல்லும் கதைகள் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் ஈழத்துச் சிறுகதைகள் ஆகிய நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 319 பக்கங்கள் 15-28
  • நூலக எண்: 1778 பக்கங்கள் 08
  • நூலக எண்: 13509 பக்கங்கள் 20-23