ஆளுமை:இராஜ ஸ்ரீகாந்தன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராஜ ஶ்ரீகாந்தன்
பிறப்பு 1948.04.20
இறப்பு 2004.04.20
ஊர் அல்வாய்
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராஜ ஶ்ரீகாந்தன் (1948.04.20 - 2004.04.20) யாழ்ப்பாணம், அல்வாயைச் சேர்ந்த கல்வியியலாளர். இவர் யாழ்ப்பாணம் தேவரையாளி இந்துக் கல்லூரி, சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார்.

இவரது முதலாவது கவிதை 1970 இல் விவேகி என்ற சஞ்சிகையில் பிரசுரமானது. இவரால் நீதிபதியின் மகள் என்ற நூலும் காலச்சாளரம் என்ற சிறுகதைத் தொகுதியும் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர், சோஷலிசம், தத்துவமும் நடைமுறையும், புதிய உலகம், சக்தி போன்ற வெளியீடுகளின் ஆசிரிய குழுவிலும் இணைந்து பணியாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 8853 பக்கங்கள் 35-36