ஆளுமை:இளங்கோவன், தம்பிராசா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இளங்கோவன்
தந்தை தம்பிராசா
தாய் சிவபாக்கியம்
பிறப்பு 1951
ஊர் புங்குடுதீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இளங்கோவன், தம்பிராசா (1951 - ) யாழ்ப்பாணம், புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர், சித்த மருத்துவர், கவிஞர். இவரது தந்தை தம்பிராசா; தாய் சிவபாக்கியம். இவர் மக்கள் கலை இலக்கியப் பெரு மன்றத்தின் செயலாளராகவும் பிலிப்பைன்ஸ் நாட்டின் மூலிகை மருத்துவ ஐ. நா தொண்டராக பணியாற்றினார். இவர் மருத்துவம், இலக்கியம், பத்திரிகை என பலதுறைகளில் தடம் பதித்ததால் பல்கலைவேந்தன் என அழைக்கப்படுகின்றார். இவர் நாவேந்தன் என அழைக்கப்படும் திருநாவுக்கரசுவின் சகோதரராவார். இவரது குடும்பம் சுதேச வைத்தியத்தில் சிறந்து விளங்கியது. இவர் தீவிர இடதுசாரி கட்சியில் ஈடுபாடுடையவர்.

இவர் சிறு வயதில் கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றார். இவர் கவிதைகளையும், சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவரது படைப்புக்களில் 'கரும் பனைகள்', 'சிகரம்' ஆகிய கவிதைத் தொகுப்புக்களும், 'இளங்கோவன் கதைகள்', 'மண் மறவா மனிதர்கள்' போன்ற நூல்களும் குறிப்பிடத்தக்கது. இதைவிட இது ஒரு வாக்குமூலம் (கவிதைகள்), நோய் தீர்க்கும் மூலிகைகள், நல்ல மனிதத்தின் நாமம் டானியல் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். இவரது எழுத்துக்களில் சமூக அவலங்களையும், அறியாமையையும் பதிவு செய்துள்ளார். இவர் பிரான்ஸ் நாட்டு வானொலியில் தமிழமுதம் நிகழ்ச்சியில் பரிகாரி பரமசிவம் என்ற பெயரில் நகைச்சுவை உணர்வோடு மூலிகைகளின் பயன்பாட்டை எடுத்து விளக்கினார்.

இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 495
  • நூலக எண்: 16172 பக்கங்கள் 3-6