ஆளுமை:உவைஸ், முகம்மது லெவ்வை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் உவைஸ்
தந்தை முகம்மது லெவ்வை
தாய் செய்நம்பு நாச்சியார்
பிறப்பு
ஊர் ஹேனமுல்ல, பாணந்துறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

உவைஸ், முகம்மது லெவ்வை. பாணந்துறை, ஹேனமுல்லையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை முகம்மது லெவ்வை; தாய் செய்நம்பு நாச்சியார். 1946 இல் உயர் கல்வியைக் கற்ற இவர், 1949 இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தையும், 1951 இல் முதுகலைமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் 1959 இல் ஜயவர்த்தனபுரப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும், நவீன கீழைத்தேய மொழித்துறையின் தலைவராகவும் கடமையாற்றியதுடன் 1979 இல் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியத் தமிழிலக்கியப் பேராசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.

இவர் தமிழ் இலக்கியத்துக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு என்னும் முதுகலைமாணிப்பட்ட ஆய்வேட்டிற்காக இருநூற்றுக்கும் மேற்பட்ட இலக்கியங்களைப் பயன்படுத்தினார். மேலும் இவர் கலாநிதிப்பட்டத்திற்காகத் தமிழ் இலக்கிய அரபுச் சொல் அகராதி என்னும் அகராதி நூலையும், இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு என்னும் இலக்கிய வரலாற்று நூலையும் எழுதியுள்ளார். இவர் மாட்டீன் விக்கிரமசிங்கவின் கம்பெறலிய நூலை மொழிபெயர்ப்புச் செய்துள்ளார்.

மதுரைத்தமிழ்ச் சங்கத்துப் புலவராற்றுப்படை, புத்தூஹுஷ்ஷாம், ஆசாரக்கோவை, திருமக்காக்கோவை ஆகியன இவரால் மறுபதிப்புச் செய்யப்பட்ட நூல்களாகும். இஸ்லாமிய இலக்கியங்கள் கூறும் இஸ்லாம் சமயக்கருத்துக்களைத் தினகரன் வார மஞ்சரியில் எழுதி மக்கள் அறியச் செய்தார். இவை பின்னர் இஸ்லாமும் இன்பத்தமிழும் என்னும் நூலாக வெளியிடப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 15515 பக்கங்கள் 10-11
  • நூலக எண்: 16488 பக்கங்கள் 52-53