ஆளுமை:கணபதிப்பிள்ளை, கந்தையா (எழுத்தாளர்)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கணபதிப்பிள்ளை
தந்தை கந்தையா
பிறப்பு 1924.04.19
ஊர் கரவெட்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கணபதிப்பிள்ளை, கந்தையா (1924.04.19 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கந்தையா. இவர் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, தென்புலோலியூர் கந்தமுருகேசனார், பொன்னம்பலப்பிள்ளை, சிவத்திரு க.சிற்றம்பல உபாத்தியார் ஆகியோரிடம் கல்வி பயின்றார்.

இவர் நயினை நாகபூஷணி அம்மன் பிள்ளைத்தமிழ், ஔவையார் எழுதிய கல்வி ஒழுக்கம், கோணாமலை யமக அந்தாதி, கந்தபுராணம் யுத்த காண்டம், வல்லிபுரக் கோவை முதலானவற்றிற்கும் செய்யுள் யாப்புக்களான தச்சை சிலேடை வெண்பா, யார்க்கரு விநாயகர் திரிபந்தாதி, அத்துளும் அம்பிகை அந்தாதி, திருவூஞ்சல்கள் முதலானவற்றிற்கும் உரை எழுதியுள்ளார்.

இவரது திறமையைக் கௌரவிக்கும் வகையில் இலக்கியக் கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களால் சிலேடை கவிரத்தினம், திருமுருக கிருபானந்தவாரியார் அவர்களால் செந்தமிழ்ச் செல்வர், இலக்கியக் கலாநிதி பண்டிதர் மு.கந்தையா அவர்களால் சிலேடைப் புலவர் என்னும் பட்டங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 05