ஆளுமை:கணேசன், கைலாயக்கம்பர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கணேசன்
தந்தை கைலாயக்கம்பர்
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கணேசன், கைலாயக்கம்பர் காரைநகரைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை கைலாயக்கம்பர். இசைக் குடும்பத்தில் தோன்றிய இவர், தந்தையிடமும் மூளாய் திரு. ஆறுமுகம், மாவிட்டபுரம் திரு. ராசா ஆகியோரிடமும் நாதஸ்வரக் கலையை முழுமையாகவும், முறையாகவும் கற்றவர்.

இவரது தந்தை காரைநகரின் மூத்த நாதஸ்வரக் கலைஞரும், ஈழத்துச் சிதம்பரம் எனப்படும் சிவன் கோவிலின் ஆஸ்தான வித்துவானுமாகப் பணிபுரிந்தவராவார். தந்தையைத் தொடர்ந்து நாற்பது ஆண்டுகள் ஈழத்துச் சிதம்பரத்தின் ஆஸ்தான வித்துவானாகப் பணிபுரிந்த இவர், நாதஸ்வரக் கலாநிதி, நாதஸ்வர இசைமணி, நாத இசைச் சக்கரவர்த்தி எனப் பல கௌரவப் பட்டங்களைப் பெற்றுள்ளார். இலங்கை வானொலிக் கலைஞராகவும் பணி புரிந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 348-349