ஆளுமை:கண்ணதாசன், லம்போதரன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் லம்போதரன்
தந்தை கண்ணதாசன்
தாய் வசந்தா
பிறப்பு 2001.08.11
ஊர் கிளிநொச்சி, வட்டக்கச்சி
வகை பல்துறைக்கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கண்ணதாசன், லம்போதரன் (2001.08.11 - ) கிளிநொச்சி, வட்டக்கச்சியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டவர். இவர் இராவணா அணியின் சிறந்த மேடை பேச்சாளர், கட்டுரை எழுத்தாளர், திரைப்பட மற்றும் நூல் விமர்சகரும் ஆவார். இவரது தந்தை கண்ணதாசன்; தாய் வசந்தா. இவர் தன்னுடைய ஆரம்பக்கல்வி தொடக்கம் உயர் கல்வி வரை கிளிநொச்சி வட்டக்கச்சி மத்திய கல்லூரியில் கல்வி கற்று தற்போது பல்கலை கழக நுழைவிற்காக காத்திருக்கின்றார்.

இவர் கலை, இலக்கிய துறையில் மேடை பேச்சுக்களிலும், விவாதங்களிலும் வெற்றியாளராகக் காணப்படுகின்றார். இந்த ஆண்டுக்கான (2021) கனடாவின் உலகளாவிய ரீதியிலான குரல் தேர்வில் சர்வதேச ரீதியில் முதலிடத்தினை பெற்றார். 2021 ஆம் ஆண்டு இரண்டாம் மாதம் நடைபெற்ற உலகளாவிய ரீதியிலான பேச்சு போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவ படுத்தி போட்டியிட்டு மூன்றாவது இடத்தை பெற்றுக்கொடுத்தார்.

இலங்கை தேசிய மாணவர் சிப்பாய்கள் படையணியில் 2017 ஆம் ஆண்டில் இணைந்து 2019 ஆம் ஆண்டில் sgt பதவி பெற்றார். 2019 ஆம் ஆண்டுக்கான போட்டியிடல் அமர்வில் (sgt) பதவியேற்ற பின் ஒரு படையணியை கிளிநொச்சி சார்பாக வழிநடாத்தினார். மேடைப்பேச்சாளர், விமர்சகர் என்பதை தாண்டி ஆய்வுக் கட்டுரையும் எழுதுபவர். இவர் தான் எழுதிய பாடல் ஒன்றையும் அண்மையில் வெளியிடவுள்ளார்