ஆளுமை:கனகலதா, கிருஷ்ணசாமி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கனகலதா
தந்தை கிருஷ்ணசாமி
பிறப்பு
ஊர் நீர்கொழும்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கனகலதா, கிருஷ்ணசாமி நீர்கொழும்பைப் பிறப்பிடமாகவும் சிங்கப்பூரை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை கிருஷ்ணசாமி. இவர் நீர்கொழும்பு விஜயரத்தினம் மகா வித்தியாலயம், யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். சிங்கப்பூர் தேசிய நாளிதழான தமிழ் முரசில் நீண்ட காலம் துணையாசிரியராகப் பணியாற்றுபவர்.

இவரது கவிதைகள், சிறுகதைகள் கணையாழி, காலச்சுவடு, உயிர்நிழல், சரிநிகர் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகக் கலைகள் மன்றம் வெளியிட்டுள்ள கவிதைத் தொகுதியிலும் (1995), தேசியக் கலைகள் மன்றம் தொகுத்த நூற்றாண்டுக்கால சிங்கப்பூர்க் கவிதைகள் பன்மொழித் தொகுப்பிலும் (2000), 'கனவும் விடிவும்' என்ற இந்திய சாகித்திய அக்கடமி வெளியிட்ட தற்காலத் தமிழ்ப் பெண் கவிஞர்கள் தொகுப்பிலும் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இவரது தீவெளி நூல் தமிழ்நாடு பெரியார் பல்கலைக்கழகத்தின் இலக்கியப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இவரது ஆக்கங்கள் ஆங்கிலம், பிரெஞ்சு, செருமானிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன

தீவெளி (கவிதைகள், 2003), பாம்புக் காட்டில் ஒரு தாழை (கவிதைகள், 2004), நான் கொலை செய்த பெண்கள் (சிறுகதைத் தொகுப்பு), The Goddess in the Living Room (புதினம்) ஆகியன இவரது நூல்கள். இவரது 'நான் கொலை செய்த பெண்கள்' என்ற புத்தகத்திற்கு 2008 ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர் இலக்கிய விருது (தமிழ்) வழங்கப்பட்டது.

வளங்கள்

  • நூலக எண்: 134 பக்கங்கள் 3

வெளி இணைப்புக்கள்