ஆளுமை:கமலநாதன், இரத்தினம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கமலநாதன்
தந்தை இரத்தினம்
பிறப்பு 1961.11.24
ஊர் கைதடி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கமலநாதன், இரத்தினம் (1961.11.24 - ) யாழ்ப்பாணம், கைதடியைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை இரத்தினம். இவர் 1982 இல் நாவற்குழி அ. த. க. பாடசாலையில் தொண்டர் ஆசிரியராக இருந்து, பாடசாலைகளில் இடம்பெறும் தமிழ்த் தினப் போட்டிகளுக்கு மாணவர்கள்க்கு நாடகங்கள் பழக்கியுள்ளார். யாழ்ப்பாண தேசிய கல்வியியற் கல்லூரியில் நாடகத்துறை விரிவுரையாளராகக் கடமையாற்றிய இவர், 25 இற்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி, நெறியாள்கை செய்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 143