ஆளுமை:கலாநிதி, தவராஜா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கலாநிதி
தந்தை நாகமுத்து
தாய் சின்னத்தங்கம்மா
பிறப்பு 1963.10.09
ஊர் துறைநீலாவணை
வகை எழுத்தாளர், சமூகசேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கலாநிதி, தவராஜா அம்பமாறை மாவட்டம் துறைீலாவணையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை நாகமுத்து; தாய் லீலாவதி. ஆரம்பக் கல்வித் தொடக்கம் உயர் கல்வி வரை துறைநீலாவணை மகாவித்தியாயத்தில் கல்வி கற்றார். இவர் ஒரு அறநெறி ஆசிரியராகவும் உள்ளார். குடும்பக் கட்டுப்பாட்டு சங்கத்தில் செயற்பாட்டு உறுப்பினராகவு்ம் முன்பள்ளி ஆசிரியராகவும் இருந்துள்ள கலாநிதி ஒரு சமூக சேவையாளராகவும் இருக்கின்றார். 2005ஆம் ஆண்டு எழுத்துத்துறைக்குள் பிரவேசித்துள்ளார். இவரின் ஆக்கம் முதல் முறையாக 2018ஆம் ஆண்டு தினகரன் பத்திரிகையிலேயே வெளிவந்ததாகத் தெரிவிக்கின்றார். பிறை எம்.எம், சக்தி எப்.எம், தென்றல், சூரியன் எப்.எம் ஆகிய வானொலிகளிலும் இவரின் ஆக்கங்கள் ஒலிபரப்பாகியுள்ளன. இணையத்தின் ஊடாகவே கூடுதலாக எழுதி வருகிறார்.


குறிப்பு : மேற்படி பதிவு கலாநிதி, தவராஜா அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.