ஆளுமை:கலைவாணி, இந்திரகுமார்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கலைவாணி
பிறப்பு
ஊர்
வகை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கலைவாணி இந்திரகுமார் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்டவர். கொழும்பு Good Shepeard Conventஇல் 1970ஆம் ஆண்டு தனது கலைப்பயணத்தை ஆரம்பித்தார்.

பரதநாட்டியம், கதகளி, மிருதங்கம், வயலின் என பல்துறைகளிலும் திறமைகளைக் கொண்டவர். பன்முகக் கலைஞர். பேராசிரியர் ரி.என்.கிருஸ்ணன், எம்.எஸ்.அனந்தராமன், ஆலத்தூர் எஸ்.நடராஜன் ஆகியோரிடம் தமிழ்நாடு இசைக்கல்லூரியில் வயலின் கற்றார்.

மூன்று வருடங்கள் படித்து சங்கீத வித்துவான் பட்டம் பெற்றார். Diploma in Music Teaching முடித்துள்ளார். இலங்கை திரும்பிய இவர் அனுராதபுரம் விவேகாந்தா மகாவித்தியாலயத்தில் சங்கீத ஆசிரியையாக கடமை புரிந்தார். 1977ஆம் ஆண்டு இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் சென்று யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் இசை ஆசிரியராகப் பணியாற்றினார். 1983ஆம் ஆண்டு இந்திரகுமாரை மணம் முடித்து லண்டனில் குடியேறினார். 1984ஆம் ஆண்டு நாதவித்தியாலயா என்னும் இசைப்பள்ளிளை உருவாக்கி வயலின் கற்பிக்கத் தொடங்கினார். லண்டன் மாநகரில் 50 அரங்கேற்றங்களைச் செய்த ஒரே பெண்மணி என்ற பாராட்டை இவர் பெற்றார். 2016ஆம் ஆண்டு 12 வயது சிறுவனின் வாசிப்பு பல கலைஞர்களின் மத்தியில் பாராட்டை கலைவாணிக்கு பெற்றுத் தந்தது.