ஆளுமை:குமாரசுவாமிப்பிள்ளை, வன்னித்தம்பி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குமாரசுவாமிப்பிள்ளை
தந்தை வன்னித்தம்பி
தாய் தெய்வானைப்பிள்ளை
பிறப்பு 1875.07.04
இறப்பு 1936
ஊர் தெல்லிப்பளை
வகை வழக்கறிஞர், ஆய்வாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குமாரசுவாமிப்பிள்ளை, வன்னித்தம்பி (1875.07.04 - 1936) யாழ்ப்பாணம், தெல்லிப்பளைச் சேர்ந்த வழக்கறிஞர், இலக்கிய ஆய்வாளர். இவரது தந்தை வன்னித்தம்பி; தாய் தெய்வானைப்பிள்ளை. இவர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் கற்று, உயர்தரக் கல்விக்காகக் கல்கத்தாவுக்குச் சென்று 1896 ஆம் ஆண்டில் கலைமாணித்தேர்வில் சித்தியடைந்து பட்டம் பெற்று இலங்கைக்குத் திரும்பினார். அதன் பின் சட்டக்கல்வி பயின்று 1900 ஆம் ஆண்டில் வழக்கறிஞராகக் கடமையாற்றத் தொடங்கினார்.

இவர் வழக்கறிஞராக இருந்த போதிலும் யாழ்ப்பாணத்திலுள்ள பழைய ஏட்டுப் பிரதிகளை தேடிப்பெற்று, ஆராய்ச்சி செய்து, பிழைகள் திருத்தி அச்சேற்றி வந்தார். தண்டிகை கனகராயன் பள்ளு, கதிரைமலைப் பள்ளு ஆகிய நூல்களைத் தேடிப்பெற்று ஆராய்ந்து, ஆராய்ச்சிக் குறிப்புக்களுடன் அச்சேற்றி வெளிப்படுத்தினார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 87-88