ஆளுமை:கூழங்கைத் தம்பிரான்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கூழங்கைத் தம்பிரான்
பிறப்பு
இறப்பு 1795
ஊர் காஞ்சிபுரம்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கூழங்கைத் தம்பிரான் (- 1795) தமிழ்நாடு, காஞ்சிபுரத்தைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையை வாழ்விடமாகவும் கொண்ட புலவர். தஞ்சை திருவத்தூர் மடத்தில் தம்பிரானாக விளங்கிய இவரை அம்மடாதிபதி தம்முடைய கண்டிகை களவு போனமையால் சந்தேகங் கொண்டு அவரைச் சத்தியம் செய்யுமாறு கேட்க, அவர் உருக்கிய நெய்யில் கையிடச்சொன்னாலுஞ் செய்வேனென்று கூறி, அவ்வாறு கையிட்டுத் தன் சத்தியத்தை நிலை நாட்டியதால் கை கூழையாகப் பெற்றவர் என்று கூறுவர்.

இச்சம்பவத்தால் ஏற்பட்ட மனக்கசப்பால் அங்கிருந்து விலகி யாழ்ப்பாணத்தில் குடியேறி வண்ணார்பண்ணை வைத்திலிங்கச் செட்டியாரின் ஆதரவில் வசித்து வந்தார். செட்டியாருக்கும் அவரது பிள்ளைகளுக்கும் கற்பித்து வந்த இவரது புகழ் எங்கும் பரவ கொழும்பு உட்படப் பல இடங்களிலிருந்தும் பாதிரிமாரும் பிறரும் இவரை அழைத்துக் கல்வி பயின்றனர்.

இவர் தனது நண்பரான பிலிப்பு தெமெல்லோ பாதிரியார் மீது 'யோசப்பு புராணம்' காவியத்தை 21 காண்டம், 1023 விருத்தத்தில் பாடியுள்ளார். இவற்றுடன் நல்லைக் கலிவெண்பா, கூழங்கையர் வண்ணம், சித்திவிநாயகர் திருவிரட்டை மணிமாலை ஆகிய செய்யுள் நூல்களையும் இயற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 120
  • நூலக எண்: 963 பக்கங்கள் 93


வெளி இணைப்புக்கள்