ஆளுமை:கேதீஸ்வரன், அமரசிங்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கேதீஸ்வரன்
தந்தை அமரசிங்கம்
தாய் -
பிறப்பு 1966.06.20
ஊர் கிளிநொச்சி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கேதீஸ்வரன், அமரசிங்கம் (1966.06.20 -) யாழ்ப்பாணம், நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் கட்டைக்காடு, பெரியகுளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை அமரசிங்கம். இவர் தனது ஆரம்ப கல்வியை நெடுந்தீவிலும் பின்னர் இடைநிலை கல்வியை இராமநாதபுரம் மகா வித்தியாலயம், தருமபுரம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலும் உயர் கல்வியை கிளிநொச்சி மகா வித்தியாலயத்திலும் கற்றார்.

இவர் அரச சேவையில் அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றிய பின் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் உதவி திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றி வருகின்றார். இவர் 1978 ஆம் ஆண்டில் தேசிய இளைஞர் சம்மேளனத்தால் நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றதாகவும் குறிப்பிடுகின்றார்.

இவர் கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டு பேரவையும், மாவட்ட செயலகமும் இணைந்து வெளியிட்டிருந்த கிளிநொச்சி மாவட்ட தொன்மையின் மூலங்கள்" எனும் ஆய்வேட்டில் "கிளிநொச்சி மாவட்ட குடியேற்ற திட்டங்களின் வரலாறும் வாழ்வியலும்" எனும் தலைப்பில் ஆய்வு கட்டுரை ஒன்றையும் பதிவுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 82754 பக்கங்கள் 36-37