ஆளுமை:கோபிகா, அழகரட்ணம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கோபிகா
தந்தை அழகரட்ணம்
தாய் சரோஜாதேவி
பிறப்பு
ஊர் முல்லைத்தீவு ஒந்தச்சிமடம்
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கோபிகா, அழகரட்ணம் முல்லைத்தீவு ஒந்தாச்சிமடத்தில் பிறந்த இவர் கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டவர். இவரது தந்தை அழகரட்ணம்; தாய் சரோஜாதேவி. ஆரம்பக் கல்வியை கொழும்பு முகத்துவாரம் இந்துக் கல்லூரியிலும் இடைநிலை, உயர்க்கல்வியை கொழும்பு விவேகானந்தா கல்லூரியிலும் கற்றுள்ளார். இவர் Certified Management Accountand ஆவார். யோகா ஆசிரியைான இவர் இரண்டு வருடங்கள் தொண்டர் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். இரண்டு தம்பி தங்கைகளுக்கு மூத்த பிள்ளையாவார் கோபிகா.

2007ஆம் அண்டு நடைபெற்ற அகில இலங்கை அறிவிப்பாளர் போட்டியில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார். கடந்த எட்டு வருடங்களாக ஊடகத்துறையில் இருக்கிறார். சூரியன் எப்எம் வானொலியில் அறிவிப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார். ஆரி வேலைப்பாடு, கேக், அழகுக்கலை என பல்வேறு திறமைகளை கொண்டவர்.