ஆளுமை:கோமாவதி, கணேசலிங்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கோமாவதி, கணேசலிங்கம்
பிறப்பு 1961.10.30
ஊர் நீர்வேலி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கோமாவதி, கணேசலிங்கம் (1961.10.30 - ) யாழ்ப்பாணம், அரியாலையைப் பிறப்பிடமாகவும் நீர்வேலியைப் வசிப்பிடமாகவும் கொண்ட இசைக் கலைஞர். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இசைத்துறையில் பயின்று, இசைக்கலைமாணிப் பட்டத்தைப் பெற்றார். அத்துடன் வட இலங்கைச் சங்கீத சபையின் அழகியல் பட்டதாரியும் ஆவார். நீர்வேலி ஆர். சி. ரி. எம். பாடசாலையில் இசையாசிரியராகப் பணிபுரிந்த இவர், தனது கலை சார்ந்த கச்சேரிகளையும் நடன நிகழ்ச்சிகளையும் நடாத்தியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 58