ஆளுமை:கௌதமி, கோபிதாஸ்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கௌதமி
தந்தை இராஜசூரியர்
தாய் பராசக்தி
பிறப்பு 1991.09.07
ஊர் தையிட்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கௌதமி, கோபிதாஸ் யாழ்ப்பாணம் தையிட்டியில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை இராஜசூரியர்; தாய் பராசக்தி. ஆரம்பக் கல்வித் தொடக்கம் உயர்கல்வி வரை தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியில் கற்றார். யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைமாணி பட்டதாரியாவார். 12 வயதில் எழுத்துத்துறைக்கு பிரவேசித்த எழுத்தாளார் கவிதை, கட்டுரை, சிறுவர் கவிதை, சிறுவர் பாடல்கள் எழுதுவதென பன்முகத் திறமைகளைக் கொண்டவர். இவரின் ஆக்கங்கள் அனுராதபுரம் தமிழ் மகாவித்தியாலயத்தின் விவேகானந்தா சஞ்சிகையிலும் மகாஜனா கல்லூரியின் மகாஜனா சஞ்சிகையிலும் வெளிவந்துள்ளன.


குறிப்பு : மேற்படி பதிவு கௌதமி, கோபிதாஸ் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.