ஆளுமை:சடாச்சரம், முருகேசு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சடாச்சரம்
தந்தை முருகேசு
பிறப்பு 1948.06.01
ஊர் தொல்புரம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சடாச்சரம், முருகேசு (1948.06.01 - ) யாழ்ப்பாணம், தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும் திருநெல்வேலியை வாழ்விடமாகவும் கொண்ட ஆர்மோனியக் கலைஞர். இவரது தந்தை முருகேசு. சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியில் கல்விப் பொதுத்தராதரம் வரை கற்றுத்தேறிய இவர், யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்தில் பணியாளராகவிருந்து ஓய்வு பெற்றார்.

இவர் பல இசை நிகழ்ச்சிகள், காவடி ஆட்டம், நாடக நிகழ்ச்சிகளுக்குப் பின்னணியாக ஆர்மோனிய இசையை வழங்கியதுடன் நாடகங்கள் சிலவற்றை நட்டுவாங்கம் செய்து மேடையேற்றியுள்ளார். சின்னமணியின் வில்லிசைக் குழுவில் ஆர்மோனியக் கலைஞராக இருந்து தன் ஆர்மோனிய இசையை ஆற்றுகைப்படுத்தினார். இவர் சுவிஸ், மலேசியா நாடுகளிலும் தனது ஆர்மோனிய ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளார். இவர் சீதையின் தூய்மையை வியந்த அனுமான்,ருக்மணி கல்யாணம், பக்த பிரகலாதன், கர்ணன், நெஸ்பிரே, வல்லவன் ராமு ஆகிய நாடகங்களில் நடித்துள்ளார்.

ஆர்மோனிய வித்துவான், வீராவேசன் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 112
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 109