ஆளுமை:சந்திரவதனா செல்வகுமாரன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சந்திரவதனா செல்வகுமாரன்
தந்தை மு.ச.தியாகராஜா
தாய் சிவகாமசுந்தரி
பிறப்பு
ஊர் பருத்தித்துறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சந்திரவதனா செல்வகுமாரன் பருத்தித்துறை, ஆத்தியடி,மேலைப்புலோலியூரைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர், வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் கல்வி கற்றவர். கணிதத் துறையில் மிகுந்த ஆர்வமும், ஈடுபாடும் கொண்டவர். 1986லிருந்து புலம்பெயர்ந்து ஜேர்மனியில் வாழ்ந்து வருகிறார்.

1975லிருந்து எழுதிவரும் இவரது எழுத்தார்வம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மூலமாகத் தொடங்கியது. இவரது பன்முகப்பட்ட படைப்புகள் வானொலிகள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்கள் பலவற்றில் வெளிவந்துள்ளன. இவரது மனஓசை வலைப்பதிவு இவரின் சமூக, அரசியல், இலக்கிய மற்றும் சுய உணர்வுகளின் வெளிப்பாடாக விரிந்து கிடக்குமொரு தளம். சிறுகதை, கவிதை, கட்டுரையென இவரது பன்முக ஆற்றலை வெளிப்படுத்தி நிற்பன இவரது ஆக்கங்கள். இவரின் படைப்புக்கள் எரிமலை, களத்தில் ஈழமுரசு, ஈழநாடு, குமுதம், இளங்காற்று, புலம், சக்தி (பெண்கள் இதழ்), பெண்கள் சந்திப்பு மலர் (பெண்கள் இதழ்), உயிர்ப்பு, பூவரசு (சஞ்சிகை), வெற்றிமணி, முழக்கம், தங்கதீபம், வடலி, குருத்து மாதஇதழ், செம்பருத்தி (சஞ்சிகை), யாழ் (இணைய இதழ்), சூரியன் (இணைய இதழ்), பதிவுகள் (இணைய இதழ்), திண்ணை (இணைய இதழ்), அக்கினி (இணைய இதழ்), யுகமாயினி உட்படப் பல பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் இணைய இதழ்கள் போன்றவற்றில் வெளிவந்திருக்கின்றன. இவரது ‘வழக்கம் போல் அடுப்படிக்குள்’ என்ற கவிதை, சமூகக் கட்டமைப்பைத் தோலுரிக்கும் பெண்மொழிக்கவிதைகள் என்ற தலைப்பில், தமிழ்த்துறை அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.