ஆளுமை:சந்திரா, தனபாலசிங்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சந்திரா, தனபாலசிங்கம்
தந்தை நாகநாதன்
பிறப்பு
ஊர் சண்டிலிப்பாய்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சந்திரா, தனபாலசிங்கம் யாழ்ப்பாணம், சண்டிலிப்பாயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை நாகநாதன். சந்திரலட்சுமி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், மானிப்பாய் மகளிர் கல்லூரியில் கல்வி கற்றுப் பாலர் ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் சிறுகதைகள், கவிதை, நாடகம், சிறுவர் இலக்கியம் என்பவற்றை எழுதினார்.

சில மனிதர்கள், உருப்பெறும் உணர்வுகள், வைரப் பனைமரம், சத்திய தரிசனம், பிறந்து விட்ட புதுயுகத்தில் ஆகியன இவரது சிறுகதை நூல்களாகும். இவர் வைரப் பனைமரம் என்ற சிறுவர் கதைத்தொகுதிக்கு 2008 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த இலக்கிய நூல் விருதை இலங்கை இலக்கியப் பேரவையினாலும் யாழ் இலக்கிய வட்டத்தினாலும் பெற்றுள்ளார்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 10174 பக்கங்கள் 32