ஆளுமை:சாந்தி பாலசுப்பிரமணியம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சாந்தி பாலசுப்பிரமணியம்
தந்தை சரவணமுத்து
தாய் ராஜேஸ்வரி
பிறப்பு 1949.10.09
ஊர் கொழும்பு
வகை தொழிலதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சாந்தி, பாலசுப்பிரமணியம் (1949.10.09 - ) கொழும்பைச் சேர்ந்த - தொழிலதிபர். இவரது தந்தை சரவணமுத்து; தாய் ராஜேஸ்வரி. தனது இளமை கல்வியை கொழும்பு நல்லாயன் கன்னியர் மடத்திலும், கல்லூரி படிப்பை கொழும்பு ஸ்ரபோட் மகளிர் கல்லூரியிலும் கற்றார். திருமணமான பின் தொழிலதிபரான தனது கணவரின் போக்குகள் ஈடுபாடுகள், கொடுக்கல் வாங்கல்கள் வர்த்தக பேச்சுவார்த்தைகள் முதலிய வர்த்தக நுட்பங்களில் கண்களையும் காதுகளையும் கூர்மையாக்கி வைத்துக்கொண்டு அவதானித்து அவற்றை கிரகித்துக்கொண்டவர். கணவர் சுகயீனமுற்று அல்லது வெளிநாடு சென்றிருந்த வேளைகளில் அவரது பொறுப்புக்களை ஏற்று வர்த்தகதுறையை பயின்று கணவரின் மறைவுக்கு பின்னர் முழுமையக வர்த்தக துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். கடந்த 25 வருடங்களாக பல வெளிநாட்டு நிறுவனங்களின் இலங்கைக்கான ஏக பிரதிநிதியாக இருந்துவரும் கோபமில் ல் தனது நிர்வாகப்பணியை ஆரம்பித்தார். இந் நிறுவனம் மின் உற்பத்தி, கடதாசி உற்பத்தி, ரயில் போக்குவரத்து, தொலைபேசி,தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இலங்கை அரசாங்கத்துக்கு கேள்விப்பத்திர அடிப்படையில் தேர்வு பெற்று பல பாரிய பணிகளை வழங்கி வருகின்றது. நமது நாட்டில் அரசியல் கட்சிகள் ஆட்சியில் மாறிய போதிலும் இந்நிறுவனம் தொடர்ச்சியாக தனது பங்களிப்பை அளிப்பதற்கு மீண்டும் மீண்டும் தெரிவு செய்யப்பட்டு வருவது இதனுடைய செயலாற்றலுக்கும் நாணயத்திற்கும் நல்லுதாரணம். இந்நிறுவனமானது அரசாங்க திணைக்களங்களுக்குள்ள நம்பிக்கைக்கு சிறிதளவேனும் பாதகம் ஏற்படும் வகையில் என்றுமே இது செயற்பட்டதில்லை. இவற்றின் காரண கர்த்தாவாக திகழ்பவர் கோபாமில் கூட்டுகம்பனிகளின் தலைமை பீடத்திலிருக்கும் சாந்தி பாலசுப்பிரமணியம் அவர்களே. இந்நிறுவனங்களின் கீழ் இயங்கும் மற்றும் ஏழு வர்த்தக நிறுவனங்களின் கூட்டமைப்பின் இயக்குனர் குழு தவிசாளராகவும் சாந்தியே விளங்குகின்றார். ஏழு வர்த்தக கூட்டுநிறுவனத்தின் நிர்வாகதலைமைப் பொறுப்பென்பது அழகுக்கும் கம்பீரத்துக்கும் புகழுக்குமான பதவி அல்ல. வீடுகளில் அல்லது வேலைத்தளங்களில் சிறு பிரச்சனை எழும் போது தலை கிறுகிறுத்து, மனம் பதைபதைத்து, நெற்றி வியர்வை துளிர்த்து களைத்துப்போய் நிற்கும் பெண்கள் மத்தியில் சிக்கல் நிறைந்த பெரிய நிர்வாக பொறுப்பில் அமைந்திருக்கும் சாந்தி ஒரே நேரத்தில் பல விதமான வேறுபட்ட செயற்பாடுகள், தீர்மானங்கள், திட்டங்கள், ஆலோசனைகள், வாடிக்கையாளர் சந்திப்புக்கள், வர்த்தகம் பற்றிய கலந்துரையடல்கள், பணியாளர்களின் பிரச்சினைகள், நெருக்கடிகள் முதலியவற்றை மிகத்திறமையாக கையாளுகின்றார். சாந்தியின் திறமையான நிர்வாகத்தால் அன்னிய செலாவனியை ஈட்டித்தர வல்ல ஏற்றுமதி வர்த்தக துறையிலும் ஈடுபட்டு வருகின்றார். இதற்காக எல்டாறோடோ எனும் அழகுச் செடியை குருநாகலில் பன்னை அமைத்து பயிரிட்டு சிறுகன்றுகளாக இங்கிலாந்து, ஹொலன்ட், டென்மாக் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றார்.