ஆளுமை:சிதம்பரப்பிள்ளை, கு.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிதம்பரப்பிள்ளை
பிறப்பு 1861
இறப்பு 1903
ஊர் வல்வெட்டித்துறை
வகை சமூகசேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிதம்பரப்பிள்ளை, கு. (1861 - 1903) யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சமூகசேவையாளர், புலவர், அரச சேவையாளன். இவர் வல்வெட்டித்துறையில் ஆங்கிலக்கல்லூரி இல்லாத காரணத்தினால் ஐந்து மைல்களுக்கு அப்பால் பருத்தித்துறை 'உவெஸ்ஸியன் மிஷன்' மத்திய பாடசாலை என்ற பெயரைக் கொண்டிருந்த ஹாட்லிக் கல்லூரியில் கற்று வந்தார். இவர் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத்தேறினார்.

இவர் வல்வையில் ஆங்கிலப் பாடசாலை இல்லாமல் மாணவர் படும் துன்பங்களை அறிந்து 1886 ஆம் ஆண்டு (ஆங்கிலப் பாடசாலை) சிதம்பராக் கல்லூரியை நிறுவியவர். இவர் சந்நிதி முருகன் மீது பதிகம் பாடியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4192 பக்கங்கள் 28