ஆளுமை:சிவகுமாரன், மு. க. சு.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவகுமாரன்
பிறப்பு
ஊர் குரும்பசிட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவகுமாரன், மு. க. சு. யாழ்ப்பாணம், குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட கலைஞர், எழுத்தாளர். இவர் தனது பதினோராவது வயதில் குரும்பசிட்டி சன்மார்க்க இளைஞர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட இவர், மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவர். இவர் சன்மார்க்க தீபம் என்ற கையெழுத்துப் பத்திரிகையை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எழுதி வெளியிட்டவர். இவர் ஜேர்மனியில் வாழும் வேளையிலும் வெற்றிமணி வெளியீடாகப் பல நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் கண்ணா, மாதவி, நிலாமகன் ஆகிய புனைபெயர்களில் புதிய வடிவங்கள், இடைவெளி, என் காதல், கிராமத்தின் சாரளம், அது என்பது இதுவா?, தமிழே காதல் ஆகிய புத்தங்களை எழுதி வெளியிட்டிருக்கின்றார்.

இவரது திறமைகளைக் கெளரவிக்கும் முகமாக 1999 இல் கனடா எழுத்தாளர் இணையம் 'ஓவியக் கலைவேள்' பட்டத்தையும் 2000 ஆம் ஆண்டில் கனடா உதயன் பத்திரிகை சார்பாக 'பல்கலைச் செல்வர்' பட்டத்தையும் 2002 இல் கொழும்பு ஆன்மீகப் பேரவை 'கலைஞானமணிப்' பட்டத்தையும் அதே ஆண்டில் கவிஞர் கந்தவனம் அவர்களால் 'வியன் கலை வித்தகன்' பட்டத்தையும் அமெரிக்கப் பல்கலைக் கழகத்தால் 'கலாநிதிப்' பட்டத்தையும் 2003 இல் கலைவிளக்குச் சஞ்சிகை 'தூரிகைச் சித்தர்' பட்டத்தையும் அதே ஆண்டில் கனடா வரசித்தி விநாயகர் ஆலயத்தால் 'கலாபூசணம்' விருதையும் பெற்றுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்பு

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 583-585
  • நூலக எண்: 14678 பக்கங்கள் 03-05