ஆளுமை:செல்லத்துரை, முருகேசு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்லத்துரை
தந்தை முருகேசு
தாய் -
பிறப்பு 1929
ஊர் கிளிநொச்சி, புளியம்பொக்கனை
வகை நாடகக்கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்லத்துரை, முருகேசு (1929-) புளியம்பொக்கணை நாகேந்திரபுரத்தை சேர்ந்த நாடக கலைஞர். இவரது தந்தை முருகேசு. இவர் தனது ஆரம்ப கல்வியை மீசாலை வீரசிங்கம் வித்தியாலயத்தில் கற்றார்.

இளவதிலேயே நாடகங்களை ஆர்வத்துடன் பார்ப்பதில் தொடங்கிய இவரது கூத்துக்கலை ஈடுபாடு, பின்னர் அவற்றில் இணைந்து நடிப்பதிலும், அவற்றுக்கான உடுக்கை வாத்தியம், டொல்கி என்பவற்றை வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றவராக உருவாக காரணமாயிற்று. இவர் பிரதேசங்களில் இடம்பெறும் பல கூத்து ஆற்றுகைகளிற்கான ஒப்பனைக்கலைஞராகவும் நீண்டகாலம் சேவையாற்றியவர். 2007 ஆம் ஆன்டில் புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தில் இடம்பெற்ற கூத்து நிகழ்விலும் தனது முதுமைகாலத்திலும் பங்கு பற்றுதல்களை வழங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1998 இல் கிளிநொச்சி மாவட்ட தமிழ் சங்கம் இக் கலைஞரின் சேவைக்காக கௌரவம் வழங்கியிருந்தது. 2012 ஆம் ஆண்டில் "கலை ஒளி" விருது இவரது கலைச்சேவைக்காக வழங்கப்பட்டிருந்தது. எமது பிரதேசத்தில் 2014 ஆம் ஆண்டு முதல் "கலைஞர் ஓய்வூதியம்" பெறும் மூத்த கலைஞருள் ஒருவராக இவரினையும் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவு செய்து பிரதேச செயலகமூடாக அவ் நிதி வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 82754 பக்கங்கள் 07-08