ஆளுமை:செல்வி, திருச்சந்திரன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்வி, திருச்சந்திரன்
தந்தை ஹன்டி பேரின்பநாயகம்
பிறப்பு
ஊர் மானிப்பாய்
வகை பெண்ணிய ஆய்வாளர், எழுத்தாளர்

செல்வி, திருச்சந்திரன் யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த பெண்ணிய ஆய்வாளர், எழுத்தாளர். இவரது தந்தை ஹன்டி பேரின்பநாயகம். இவர் கொக்குவில் இந்துக் கல்லூரியில் கற்றுப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தையும் சமூக ஆய்வு நிறுவனத்தில் முதுகலைமாணிப் பட்டத்தையும் அம்ஸ்டாமில் உள்ள விறிகே (Vrige) பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றிருக்கின்றார். இவர் கிழக்குப் பல்கைக்கழகத்தில் அதிதி விரிவுரையாளராகப் பணியாற்றுவதுடன் பெண்நிலை, வர்க்கம், பண்பாடு, பால் நிலை போன்ற பல விடயங்களை ஆய்வு செய்து எழுதி நூலாக்கியுள்ளார். நிவேதினி என்ற பெண்நிலைவாத சஞ்சிகையின் ஆசிரியராகவும் திகழ்கின்றார்.

இவர் பெண்ணியம் சார்ந்த அமைப்புகளில் முக்கிய உறுப்பினராக இருந்து ஆய்வு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார். இவர் ஆங்கிலம், தமிழ் ஆகிய இருமொழிகளில் புலமை கொண்டவராகவும் Feminine Speech Transmissions, Ideology, Caste, Class and Gender Images,The Politics of Gender and Women´s Agency in Post Colonial Sri Lanka, The Dilemma of Theories, The Other Victims of War, The Spectrum of Femininity : A Process of Deconstruction, Women's Writings Subjectivities and Historicism, Women, Narration and Nation, தமிழ் வரலாற்றுப் படிமங்கள் சிலவற்றில் ஒரு பெண்ணிலை நோக்கு, பெண்களின் வாய்மொழி இலக்கியம் தாலாட்டு ஒப்பாரி பற்றிய ஒரு சமூகவியல் நோக்கு, பெண்நிலைவாதமும் கோட்பாட்டு முரண்பாடுகளும் ஒரு சமூகவியல் நோக்கு, மதப்பண்பாட்டின் கோலங்களையும் கருத்தியலையும் கட்டவிழ்க்கும் ஒரு பால்நிலை நோக்கு, மாற்றுச் சிந்தனையும் விரிபடு களமும், வர்க்கம் சாதி பெண்நிலை பண்பாடு, வாழ்வியல் சமதர்மக் கோட்பாடுகளுடன் முரண்பட்டு நிற்கும் மேட்டுநிலை, பண்பாட்டுக் கோலங்கள் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

செல்வி திருச்சந்திரன் பற்றி தமிழ் விக்கிப்பீடியவில்

வளங்கள்

  • நூலக எண்: 1950 பக்கங்கள் 17-25
  • நூலக எண்: 10858 பக்கங்கள் 03-06