ஆளுமை:சோபிதா, முகுந்தன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சோபிதா
தந்தை முகுந்தன்
தாய் தபோதினி
பிறப்பு 1997.03.09
இறப்பு -
ஊர் வவுனியா
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சோபிதா, முகுந்தன் (1997.03.09) வவுனியா, தேக்கவத்தையில் பிறந்த இளம் எழுத்தாளர். இவரது தந்தை முகுந்தன்; தாய் தபோதினி. வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தில் கல்வியை கற்றார். 2015ஆம் ஆண்டு முதல் எழுத்துத்துறையில் தன்னை இணைத்துக்கொண்டுள்ள சோபிதா, சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என எழுதிவருகிறார். இவரின் "தாய்" என்ற சிறுகதை தொகுப்பு நூல் 2016ஆம் ஆண்டு தேசிய இளைஞர் மன்றத்தின் விருது பெற்றமை இவரின் எழுத்துத்திறமைக்கு சிறு வயதிலேயே கிடைத்துள்ள அங்கீகாரமாகக் கருதலாம். எழுத்தாளர் சோபிதாவின் "பசும்பால் என்பது பூலோக அமிர்தம்" என்னும் கவிதை ஆயிரம் கவிஞர்கள் கவிதைகள் எனும் நூலில் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பு : மேற்படி பதிவு சோபிதா முகுந்தன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

படைப்புகள்

  • தாய்
  • பசும்பால் என்பது பூலோக அமிர்தம்
  • ஆரோக்கிய வாழ்வு
  • அறிவுமலை அப்துல்கலாம்
  • இலங்கையின் இன முரண்பாடுகளுக்கான தீர்வின் அவசியமும் வழிமுறைகளும் (கட்டுரை)
  • இலங்கையின் இன முரண்பாடுகளுக்கான தீர்வின் அவசியமும் வழிமுறைகளும் (கட்டுரை)
  • அன்றுதொட்டு இன்றுவரை பனையின் வகிபாகம்
  • இயற்கை அனர்த்தங்களும் அவற்றின் பாதிப்புகளும்
  • விந்தைமிகு உலகின் தோற்றமும் பரினாம வளர்ச்சியும் பற்றிய வினோதமான கற்பித்தல் (சிறுகதை)
  • முழுமையான சிறந்த தேசத்தை கட்டியெழுப்பும் கலையும் இலக்கியமும்