ஆளுமை:ஜெனீரா, தௌபீக் ஹைருன் அமான்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜெனீரா
தந்தை தௌபீக்
தாய் அபீபா உம்மா
பிறப்பு 1967.05.16
ஊர் திருகோணமலை
வகை எழுத்தாளர், கல்வியாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெனீரா, தௌபீக் ஹைருன் அமான் (1967.05.16) திருகோணமலை, கிண்ணியாவில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை தௌபீக்; தாய் அபீபா உம்மா. ஆரம்பக் கல்வி முதல் உயர்தரம் வரை கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றார். இதே பாடசாலையில் தொடர்ந்து ஆசியர் பணியாற்றினார். திருகோணமலை மாவட்டத்தில் சிறுவர் இலக்கியம் படைத்த முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவர் ஜெனீரா ஹைருல் அமான். தனது ஏழாவது வயதிலேயே இவரின் தந்தையின் ஊக்கம் காரணமாக எழுத்துத்துறைக்கு பிரவேசித்துள்ளார். இவரின் முதலாவது ஆக்கம் ”எனது பொழுதுபோக்கு” என்ற தலைப்பில் தினகரன் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையாகும். பாடசாலைக் காலத்திலேயே கவிதை, கட்டுரை போன்றவற்றில் ஈடுபாடுகொண்டவராகக் காணப்பட்டார். 1991ஆம் ஆண்டு அளுத்கம ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெறும் காலத்தில் ”பாலர் பாடல்” எனும் சிறுவர் இலக்கிய நூலை வெளியிட்டுள்ளார்.

விருதுகள்

திருகோணமலை நூலக சபை விருது, கிண்ணியா பிரதேச செயலகம் இலக்கியத் தாரகை விருது, கிழக்கு மாகாண சாஹித்திய விருது – சிறுவர் இலக்கியம்


படைப்புகள்

 • பிரியமான சினேகிதி
 • சிறுவர் இலக்கியம்
 • பாலர் பாடல் 1991
 • சின்னக்குயில் பாட்டு 2009
 • மிதுகாவின் நந்தவனம் 2010
 • கட்டுரை எழுதுவோம் 2010


வளங்கள்

 • நூலக எண்: 5307 பக்கங்கள் {{{2}}}
 • நூலக எண்: 9378 பக்கங்கள் 18
 • நூலக எண்: 9779 பக்கங்கள் 10
 • நூலக எண்: 9940 பக்கங்கள் 18
 • நூலக எண்: 13515 பக்கங்கள் 41
 • நூலக எண்: 14525 பக்கங்கள் 44-45
 • நூலக எண்: 15151 பக்கங்கள் 4-9

வெளி இணைப்புக்கள்