ஆளுமை:தங்கலட்சுமி, செல்லத்துரை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தங்கலட்சுமி
தந்தை செல்லத்துரை
பிறப்பு 1935.10.29
ஊர் வட்டுக்கோட்டை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தங்கலட்சுமி, செல்லத்துரை (1935.10.29 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இசைக்கலைஞர், இசையாசிரியர். இவரது தந்தை செல்லத்துரை. இவர் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் இடைநிலைக் கல்வியைப் பயின்று, பின்னர் இந்தியா சென்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கர்நாடக சங்கீதத்தில் சங்கீத பூஷணம் பட்டம் பெற்றார்.

1974 முதல் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் இசை ஆசிரியையாகப் பணியாற்றிய இவர், யாழ்ப்பாணம் ரசிகரஞ்சனசபா அரங்கில் தனது முதலாவது அரங்கேற்றத்தை நிகழ்த்தியதோடு நாட்டின் பல பாகங்களிலும் இசைக் கச்சேரிகளை நடாத்திச் சிறந்த சாஸ்திர இசைப் பாடகியாகத் திகழ்ந்துள்ளார். 2005 ஆம் ஆண்டு நல்லூர் கலாச்சாரப் பேரவை இவரின் கலைச் சேவையைப் பாராட்டிக் கலைஞானச்சுடர் விருது வழங்கிக் கௌரவித்துள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 92
  • நூலக எண்: 12940 பக்கங்கள் 1-5
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 69