ஆளுமை:நசீலா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நசீலா
தந்தை -
தாய் -
பிறப்பு -
இறப்பு -
ஊர் காத்தான்குடி
வகை எழுத்தாளர், ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நசீலா காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். 1980களில் கவிதை எழுதுவதன் மூலம் இலக்கியத்துறையில் காலடி எடுத்து வைத்த இவர் பதினைந்துக்கு மேற்ப்பட்ட வானொலி நாடகங்களை எழுதியுள்ளார். பாரதி அவதரித்தான் என்ற தலைப்பிலேயே இவர் முதல் கவிதையை எழுதினார். மேலும் 1980களில் அவளுக்கு வாழ்வு வரும் என்ற சிறுகதையினை சிந்தாமணி பத்திரிகையில் எழுதினார்.

பெண் அடிமைத்தனத்தைப் புதைப்பதும், பெண் விடுதலையை விதைப்பதுவுமே அவரது எழுத்துக்களின் மூலவேராக காணப்படுகின்றது. இதுவரைக்கும் 50க்கும் மேற்ப்பட்ட சிறுகதைகளை இவர் பத்திரிகைகளுக்கு எழுதியுள்ளார். இவரது கண்ணுக்குள் சுவர்க்கம் எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நசீலா&oldid=408017" இருந்து மீள்விக்கப்பட்டது