ஆளுமை:பிரபாலினி, பிரபாகரன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பிரபாலினி
தந்தை பரமேஸ்வரன்
தாய் மாலினி
பிறப்பு
ஊர் திருகோணமலை
வகை பாடகி, பாடலாசியரியர், இசையமைப்பாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பிரபாலினி, பிரபாகரன் திருகோணமலையில் பிறந்த இசையமைப்பாளர். இவரது தந்தை பரமேஸ்வரன் (இசையமைப்பாளர்); தாய் மாலினி (சங்கீதபூஷணம்). பிரபாலினி பிரபாகரன் இலங்கையின் முதலாவது பெண் இசையமைப்பாளர் என்ற பெருமைக்குரியவர். 1986ஆம் ஆண்டு ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்துள்ள இசையமைப்பாளர் தனது கல்வியை ஜேர்மனியிலேயே தொடர்ந்துள்ளார். இவர் (International Bussiness Management) சர்வதேச வர்த்தக முகாமைத்துவம் பூர்த்தி செய்துள்ளார். பிரபாலினி பிரபாகரன் இசையமைப்பாளர், பாடகி, கவிஞர், ஜேர்மனியில் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் மொழிபெயர்ப்பாளர் என பன்முக ஆளுமைகளைக் கொண்டவர். தனது 10 வயதிலேயே ஜேர்மன் நாட்டுக்கு புலம்பெயர்ந்து சென்றாலும் சரளமாக தமிழ்மொழியை பேசுகிறார். இதற்கான காரணம் தனது தாய் என நினைவுகூரும் இவர் வாசிப்பு பழக்கத்தை சிறுவயதிலேயே தாய் தனக்கு பழக்கியதாகக் கூறுகிறார். இவரின் தாய் சங்கீதபூசணம் மாலினி அவர்கள். இவரது தாயிடமே கர்நாடக இசையை முறையாக கற்றுள்ளார். மெட்டை ஞாபகம் வைப்பதற்காகவே கவிதை விளையாட்டாக முதல் முறையாக எழுதியாக கூறும் பிரபாலினி பிரபாகரன் அவரின் முதலாவது பாடலாக கண்ணென்ன கண்ணோ பெண்ணென்ன பெண்ணோ எனும் பாடலை தனது 13ஆவது வயதில் எழுதியதாக குறிப்பிடுகிறார்.

வெளி இணைப்புக்கள்