ஆளுமை:பூபாலசிங்கம், எஸ்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பூபாலசிங்கம்
பிறப்பு 1940.03.25
ஊர் கோண்டாவில், யாழ்ப்பாணம்
வகை ஆளுமை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பூபாலசிங்கம், எஸ் (1940.03.25) யாழ்ப்பாணம், கோண்டாவிலைச் சேர்ந்த ஆளுமை. கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும் உரும்பிராய் இந்துக் கல்லூரியில் இடைநிலை உயர்நிலைக் கல்வியையும் ஆங்கில மொழி மூலம் கற்றார். பேராதனைப்பல்கலைக்ழகத்தில் வெளிவாரியாகா பட்டப்படிப்பை தமிழ், இந்து நாகரீகம், ஆங்கில இலக்கியம் ஆகிய பாடங்களை கற்று பட்டம் பெற்றார். தமிழ் பண்டிதர் பரீட்சையிலும் சித்தி பெற்றார். வித்துவா்ன பொன் முத்துக்குமாரன், பண்டிதர் துரைசிங்கம், வித்துவான் வேந்தனார் ஆகியோரிடம் தமிழ் படித்துள்ளார்.

1982ஆம் ஆண்டு ஆங்கில ஆசிரியராக நியமனம் பெற்றார். பேராதனை பல்கலைக்கழகத்தில் ஆங்கில ஆசிரிய பயிற்சியையும் பெற்றுக்கொண்டார். வவுனியா இறம்பைக்குளத்தில் College of Learning கல்விக் கூடத்தை நிறுவி வவுனயிாவில் ஆங்கில கல்வி விருத்திக்கு 1965ஆம் ஆண்டு தொடக்கம் பங்களிப்பு செய்துள்ளார். Delic ஆங்கில (92-95) இணைப்பாளராகவும், வவுனியா வளாகத்தில் பகுதி நேர விரிவுரையாளராகவும் இருந்துள்ளார். தொலைக்கல்வி போதனாசிரியராகவும் கல்வியியல் கல்லூரி வருகை விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார். சேவைக்கால ஆங்கில ஆலோசகராகவும், ஆங்கில உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றி 2001ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

உருகி எரியும் கற்பூரங்கள், நன்றிக்கடன், பண்டரவன்னியன், கண்ணப்ப நாயனார் போன்ற நாடகங்களை மாணவர்க்கு ஆங்கிலத்தில் வழக்கினார். இவர் தொகுத்த ஒரு நூலாக Melting Camphours வவுனியா ஆங்கில மன்றத்தினனூடாக வெளியிடப்பட்டது. பல நாடகங்கள், பாடல்களை எழுதி மாணவர்களுக்குப் பழக்கினார். Focus on Reading and Writing இவரின் ஆங்கில மொழிக் கல்வி நூலாக வெளிவந்துள்ளன.

விருதுகள்

சிறந்த ஆசிரியராக 1991 இல் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 8564 பக்கங்கள் 66