ஆளுமை:பொன்னம்பலம், வட்டன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பொன்னம்பலம்
தந்தை வட்டன்
தாய் -
பிறப்பு -
ஊர் கிளிநொச்சி, செல்லியா தீவு
வகை கூத்துக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பொன்னம்பலம், வட்டன் கிளிநொச்சி, செல்லியா தீவைச் சேர்ந்த கூத்துக் கலைஞர். இவரது தந்தை வட்டன். சிறுவயதிலிருந்து காத்தான் கூத்து ஆசை கொண்ட இவர் தம்பிராயை சேர்ந்து தம்பிமுத்து அண்ணாவியிடம் இருந்துதான் காத்தான்கூத்தினை கற்றுக்கொண்டதாக பெரியவர்கள் கூறுகின்றனர். பெரியவர்கள் கூற்றினை அதிகரிப்பதற்காக அமைகின்றது வட்டன் பொன்னம்பலம் அண்ணாவியின் மகன் மகாலிங்கம் அண்ணாவியின் கூத்துத அப்பா தம்பிராயர் சேர்ந்த தம்பிமுத்து அண்ணாவின் காத்தான்குடியில் நடித்துள்ள அவரிடமிருந்து தான் கற்றுக் கொண்டு பிற்காலத்தில் பழகி வந்தார்.

காத்தான்கூத்தில் பிரபல்யமானவராக திகழ்ந்தார் வட்டன் பொன்னம்பலம் அவர்கள். செல்லியாதீவு அம்மன் கோயிலில் இவருடைய காத்தான் கூத்து பல தடவைகள் மேடையேற்றப்பட்ட இவருடைய காத்தான்கூத்தின் சிறப்பினையும் மேடையேற்றங்களையும் செட்டியார் குறிச்சி பெரியவர்கள் மூலமாகவும் அறியக்கூடியதாக இருக்கின்றது.. 1962ஆம் ஆண்டு செல்லியா தீவு அம்மன் கோயில் திருவிழாவிற்கு மேடையேற்றப்பட்ட காத்தான்ககூத்தில் இவருடைய மகன் மகாலிங்கம் அண்ணாவி 12 வயதுச் சிறுவனாக கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். தனக்குப் பிறகு இந்தக் கூத்துக்களை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு தனது மகன் மகாலிங்கம் அவர்கள் நாடகங்களில் நடிக்க செய்து தனது பழக்கங்களில் தன் கைக்குள் வைத்து கற்று கொடுத்தார் .தனது காலத்தில் தன் மகனுடைய காத்தான் கூத்து பழக்கங்களையும் மாற்றத்தையும் கண்டு பாராட்டினார்.