ஆளுமை:பொன்னுத்துரை, செல்லர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பொன்னுத்துரை
தந்தை செல்லர்
பிறப்பு 1936.02.27
ஊர் அரியாலை
வகை கலைஞர்

பொன்னுத்துரை, செல்லர் (1936.02.27 - ) யாழ்ப்பாணம், அரியாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆர்மோனிய இசைக்கலைஞர். இவரது தந்தை செல்லர். இவர் சிறுவயதில் வாத்திய இசைமேற் கொண்ட ஆர்வத்தால் மென்ரலின் இசைக்கருவியைச் சுயமாக இசைக்கத் தொடங்கியவர். இவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பரிசாரகராகப் பணியாற்றி ஓய்வு பெற்றபோதும் இசைக்கலையில் ஆர்வம் கொண்டு எகோடியன் வாத்தியக் கருவியைக் கச்சேரிகளில் வாசித்துப் பாராட்டுதலைப் பெற்றிருக்கின்றார்.

இவர் இசைநாடகங்களுக்கு ஆர்மோனியப் பக்கவாத்தியக் கலைஞனாகப் பங்களித்ததுடன் ஓகன், மெலோடிக்கா ஆகிய வாத்திய இசைக்கருவிகளையும் இசைத்துள்ளார். இவர் பக்திப் பாமாலை என்னும் ஒலி நாடாவை யாழ்.இலக்கிய வட்டத் தலைவர் செங்கை ஆழியனூடாக வெளீயீடு செய்து வைத்ததோடு இவரே இப்பாமாலையின் பின்னணி இசையை முன்னின்று செயற்படுத்தினார்.

இவருக்கு 1995 ஆம் ஆண்டு அரியாலை காந்தி சனசமூக நிலைய கலை இலக்கியப் பேரவை ஆர்மோனிய இசையரசு என்ற பட்டத்தையும் 2001 ஆம் ஆண்டு இந்து சமயக் கலாச்சார அமைச்சு கலைஞான கேசரி என்ற பட்டத்தையும் 2002 ஆம் ஆண்டு இந்து சமயக் கலாச்சாரத் திணைக்களம் கலாபூஷணம் என்னும் தேசிய கலை விருதையும் 2005 ஆம் ஆண்டு நல்லூர் பிரதேசக் கலாச்சாரப் பேரவை கலைஞானச்சுடர் விருதையும் வழங்கிக் கௌரவித்துள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 93
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 112