ஆளுமை:பொன்னையா, ஐயம்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பொன்னையா
தந்தை ஐயம்பிள்ளை
தாய் பொன்னாச்சிப்பிள்ளை
பிறப்பு 1910.10.21
இறப்பு 1993.07.14
ஊர் வேலணை
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பொன்னையா, ஐயம்பிள்ளை (1910.10.21- 1993.07.14) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர். இவரது தந்தை ஐயம்பிள்ளை; தாய் பொன்னாச்சிப்பிள்ளை. இவர் நாகேஸ்வரி வித்தியாசாலை, புங்குடுதீவு சண்முகநாதன் வித்தியாசாலை, நயினாதீவு கணேச வித்தியாசாலை போன்ற பாடசாலைகளில் ஆசிரியராகவும் யாழ் குருநாத சுவாமி வித்தியாசாலை, கரம்பொன் கிழக்கு சிவகுருநாத வித்தியாசாலை, வேலணை வடக்கு ஆத்திசூடி வித்தியாசாலை என்பவற்றில் அதிபராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் வேலணை கிராம சபை ஐந்தாம் வட்டாரப் பிரதிநிதியாகவும் வேலணை தபாலதிபராகவும் வேலணை கிராம முன்னேற்றச் சங்கத் தலைவராகவும் பதவி வகித்துப் பல சமூக சேவைகளைச் செய்து வந்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 301-305