ஆளுமை:பௌஸியா, அலியார்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பௌஸியா
தந்தை நாவலர் ஈழமேகம் பக்கீர்த்தம்பி
பிறப்பு
ஊர் அம்பாறை
வகை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


பௌஸியா, அலியார் அம்பாறை சம்மாந்துறையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை நாவலர் ஈழமேகம் பக்கீர்த்தம்பி என்ற அடைமொழியில் இலக்கிய உலகிற்கு மிகவும் பரீசையமானவர். ஆசிரியரான இவர் கவிதைகள் எழுதுவதில் திறமையானவர். சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தின் பாடசாலைக் கீதம் பௌசியாவினால் இயற்றப்பட்டது. பௌஸியா பக்கீர்தம்பி என்ற பெயரில் ஆரம்பத்தில் எழுதி வந்தாலும் திருமணத்திற்கு பின்னர் பௌஸியா அலியார் என்ற பெயரிலேயே எழுதி வருகிறார். இவரின் கணவர் அலியாரும் ஒரு இலக்கியவாதியாவார். பௌசியா இரண்டு ஆண்பிள்ளைகளுக்கும் ஒரு பெண் பிள்ளைக்கும் தயாயுமாவர். இவரின் மகள் ஷெரீன் ஆங்கிலக் கவிதைகளை எழுதி வருகிறார். 2012ஆம் ஆண்டு மணி ஆரம் என்ற பெயரில் சிறுவர் பாடல் தொகுதியையும் வெளியிட்டுள்ளார். 2016ஆம் ஆண்டு கணவருடன் இணைந்து இளசுகளின் உலகம் என்ற பெயரில் கவிதைத் தொகுப்பொன்றையும் வெளியிட்டுள்ளார். தற்பொழுது ஆசிரியர் சேவையில் இருந்து ஓய்வுபெற்றுள்ள இவரின் கவிதைகள், கட்டுரைகள் பத்திரிகைகள் வாயிலாக வெளிவருகின்றன.

விருது

2013ஆம் ஆண்டு அரச இலக்கிய விழாவில் இவருக்கு கலாபூஷணம் விருது கிடைத்தது.