ஆளுமை:முபஷ்ஷிதா, நௌபர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முபஷ்ஷிரா
தந்தை நௌபர்
தாய் சித்தி சப்ஜான் நோனா
பிறப்பு
ஊர் உடத்தலவின்ன
வகை எழுத்தாளர்

முபஷ்ஷிதா, நௌபர் கண்டி உடதலவின்னையில் பிறந்த ழுத்தாளர். இவரது தந்தை நௌபர்; தாய் சித்தி சப்ஜான் நோனா. உடதலவின்னை ஜாமிபல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் கற்றார். பாடசாலை காலத்திலேயே எழுத்துலகிற்குள் பிரவேசித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு Norwegian Embassy யினால் நடத்தப்பட்ட இளம் பெண் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்களுக்கான செயலமர்விற்கு ஆயிரக்கணக்கான போட்டியாளர்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மூன்று முஸ்லிம் பெண் எழுத்தாளர்களில் இவரும் ஒருவராவார். இவரின் ஆக்கங்கள் விடிவெள்ளி, நவமணி, மீள்பார்வை, எங்கள் தேசம் போன்ற நாளிதழ்களிலும் அல்ஹஸனாத் , வைகறை போன்ற சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளதுடன் இலங்கை வானொலியின் கவிதைக்களம், இளைஞர் இதயம் போன்றவற்றிலும் இவரது இலக்கிய படைப்புக்கள் இடம்பெற்றுள்ளன. லோட்டஸ் கேர்ள், புத்தக உலகம் என்ற சிறுவர் ஆக்கத்தையும் உங்கள் குழந்தை ஒர் நட்சத்திரம் என்ற கட்டுரையையும் பல கவிதைகளையும் இலக்கிய உலகிற்குத் தந்துள்ளார். என் கவிதைக்கு மனசென்று பெயர் என்ற கவிதை நூலை 2016ஆம் ஆண்டு வெளியிட்டார்.


வெளி இணைப்புக்கள்