ஆளுமை:ராஜினி, மோகனராஜ்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ராஜினி
பிறப்பு
ஊர் சங்கானை, யாழ்ப்பாணம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ராஜினி, மோகனராஜ் யாழ் சங்கானையில் பிறந்த கலைஞர். இவரது ஆறு வயதில் இருந்தே பரதநாட்டியத்தை கலைச்செல்வன் ஏரம்பு சுப்பையாவிடமும் இசை வாருதி ஸ்ரீ வீரமணி ஐயரிடமும், கவிஞர் வேல் ஆனந்தனிடம் கதக்களி நடனப் பயிற்சியையும் பெற்றார். இலங்கையில் பல இடங்களிலும் நடன நிகழ்ச்சிகளில் பங்குபற்றினார். நடனத்தை மேலும் பயில்வதற்காக இந்தியா சென்று சென்னையில் மறைந்த பரதசூடாமணி அடையார் ஸ்ரீ கே.லட்சுமணனிடம் பயின்று நாட்டியத்திலும் நட்டுவாங்கத்திலும் பட்டம் பெற்றார்.

இலங்கையில் பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றிய போது நடன நாட்டிய நாடகங்களை தயாரித்து வழங்கினார். கிருஸ்ணலீலா, சீதாகலியாணம், தாருகாவனம், மன்மத தகனம் போன்றவையாகும்.

இலங்கை கல்வித் திணைக்களத்தினால் நடன பாடத்திட்டம் தயாரித்தல், வினாத்தாள் தயாரித்தல், பரீட்சை வினாத்தாள் திருத்துதல், செயன்முறை பரீட்சை ஆகியவற்றிலும் இவரின் பங்கு பெருமளவாக காணப்பட்டது. ஆசிரியர் கலாசாலையில் நடன விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளாக பிரித்தானிய சைவமுன்னேற்றச் சங்கத்தின் நாவலர் தமிழ்ப் பாடசாலையில் நடன ஆசிரியராக கடமையாற்றி வருகின்றார். கனக நிருத்தாலயா என்ற நடன பள்ளியை நிறுவி நடனத்தை கற்பித்து வருகின்றார்.