ஆளுமை:ரிஸானா, பாரூக்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ரிஸானா
தந்தை யூ.எல்.பாரூக்
தாய் டபிள்யு.எம்.மரியம் பீபி
பிறப்பு
ஊர் கேகாலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ரிஸானா, பாரூக் கேகாலை எட்யாந்தோட்டை கராகொடை என்னும் ஊரில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை யூ.எல்.எம்.பாரூக்; தாய் டபிய்யூ.எம்.மரியம் பீபி. இவர் அவிசாவளை தல்துவை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றார். ரஸானாவின் ஆக்கங்கள் வானொலி, தொலைக்காட்சிகள், பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. என் விழியில் தங்கிய நினைவுகள், சமாதானமே புறப்பட்டு வா ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். சமாதானமே புறப்பட்டு வா கவிதை நூல் இந்து, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாம் தலைவர்களின் நல்லாசிகளுடன் வெளிவந்துள்ளதுடன் பலரது பாராட்டையும் பெற்றுள்ளமை விசேட அம்சமாகும். இவர் எழுத்துத்துறை தவிர அழககுக்கலை, தையற்கலை, பெயின்டிங் போன்றவற்றிலும் நிபுணராக தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.  

படைப்புகள்

  • என் விழியில் தங்கிய நினைவுகள்
  • சமாதானமே புறப்பட்டு வா
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ரிஸானா,_பாரூக்&oldid=316028" இருந்து மீள்விக்கப்பட்டது